உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக 3,000 அரச ஊழியர்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளதுடன், அவர்களுக்கு தாபனக்கோவை விதியின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், உள்ளாட்சிசபைத் தேர்தல் தற்போது
ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் சம்பளமற்ற விடுமுறைக்கான காலம் நீடிக்கப்படுகின்றமையால்
குறித்த அலுவலர்கள் பொருளாதார ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் உள்ளாட்சி தேர்தலுக்காக நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ள அரச
அலுவலர்களுக்காக 2023.03.09 ஆம் தொடக்கம் 2023.04.25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய அடிப்படைச் சம்பளத்தைச் செலுத்துவதற்காக அரச பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், மற்றும் உள்ளாட்சிசபை அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது











