உள்ளாட்சி தேர்தலில் மீண்டெழுவோம்: நாமல் சூளுரை!

பொதுத்தேர்தலைவிடவும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கூடியது.

இதன்போது கட்சியின் புதிய தேசிய ஏற்பாட்டாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டிவீ சானக நியமிக்கப்பட்டுள்ளார். கிராமிய மட்டத்திலான அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்குரிய பொறுப்பு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, மொட்டு கட்சியை பலப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

” ஜனாதிபதி தேர்தல் எமக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் பொதுத்தேர்தலில் மீண்டெழ முடிந்தது. அதைவிடவும் சிறந்த பெறுபேறு உள்ளாட்சிசபைத் தேர்தலில் கிடைக்கப்பெறும்.” – எனவும் நாமல் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles