உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் – தேர்தல் ஆணைக்குழு

நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்புக்குள் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தத் தயாரென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில், தேர்தல் நடத்துவதும் அபிவிருத்தியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கட்சிகளின் உள்ளக ஜனநாயகம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சிக்கல்கள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைமுறை தொடர்பான பொதுமக்கள்விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆகியோர் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles