உள்ளாட்சி தேர்தல் குறித்து சஜித் அணி கழுகுப்பார்வை!

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது.

புத்தாண்டுக்குரிய அரசியல் செயற்பாடுகள், உள்ளாட்சிசபைத் தேர்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், முக்கிய சில முடிவுகளை எடுப்பதற்காகவுமே இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

இதில் கட்டாயம் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிரணி பிரதம கொறடா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு முடிந்த பின்னர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுடன் சஜித் பிரேமதாச பேச்சு நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles