உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஈபிடிபி தனிவழி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் தனித்திப் போட்டியிடவுள்ளது என்று அந்தக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ஈ.பி.டி.பி. தனது தனித்துவத்துடனேயே அனைத்து தேர்தல்களிலும் முகங்கொடுத்து வருகின்றது.
குறிப்பாக வடக்கின் ஐந்து மாவட்டங்கள், கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்த லில் ஈ.பி.டி.பி. தனது சின்னமான வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டி யிடவுள்ளது.

அதனடிப்படையில் இந்தத் தேர்தலில் எமது மக்கள் எமது கட்சிக்கு அணி திரண்டு வாக்களித்து எம்மை வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்.” – எனவும் ஈபிடிபியின் ஊடக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles