முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
புதுக்குடியிருப்பு, கைவேலியில் குறித்த குழந்தை உழவு இயந்திரத்தில் மோதுண்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த குழந்தை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










