ஊரடங்கில் மதுபான விருந்து நடத்திய ஐவர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இந்தக் காலப்பகுதியில் மதுபானம் விருந்து நடத்திய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குருணாகலில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த மதுபான விருந்து நடத்தப்பட்டுள்ளது.

பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, ஓட்டலில் சுற்றிவளைக்கப்பட்ட போது, ஐவர் கைதுசெய்யப்பட்டதுடன், சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றும் உள்ளனர்.

தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்வதற்கு விசேட தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், வரும் 24ஆம் திகதி குருணாகல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles