ஊரடங்கில் வேட்டைக்குச்சென்றவர் துப்பாக்கியுடன் கைது!

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் உள்ளூர் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர், வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சாந்தபுரம் காட்டுப்பகுதியில் குறித்த துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற நிலையில் நேற்று (01) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் துப்பாக்கி, உந்துருளி, போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று(02) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தியுள்ளனர்

Related Articles

Latest Articles