நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று ( 12) காலை 07 மணிக்கு தளர்த்தப்பட்டது. எனினும், மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
அவ்வாறு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை(13) காலை 06 மணி வரை அமுலிலிருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து பெருமளவான மக்கள் நகர் பகுதிகளை நோக்கி வருகின்றனர்.
