‘ஊவா மாகாண தேர்தல்’ குறித்து இன்று முக்கிய கூட்டம்!

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் அரசியல் பிரிவுக் கூட்டம் , பசறைப் பகுதியின் வெலிபிஸ்ஸ சனசமூக நிலைய கேட்போர் நாளை (30) நடைபெறவுள்ளது.

மேற்படி அரசியல் பிரிவின் எதிர்கால வேலைத்திட்டம், ஊவா மாகாண சபை தேர்தல் விடயம், தொழிற்சங்க, அரசியல் பிரச்சினைகள், பெருந்தோட்டப் பகுதிகளைச் சூழவுள்ள கிராமிய மக்களுடனான தொடர்பாடல், சேதனப் பசளை உற்பத்தி திட்டம், விவசாய உற்பத்தி சம்பந்தமான வழிகாட்டல்கள், சுகாதார வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு, இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஆகியன குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளன.

இந்நிகழ்வுகள் அனைத்தும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் அரசியல் பிரிவு செயலாளர் இரா. சலோபராஜாவின் தலைமையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் மற்றும் தோட்டக்கமிட்டித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுச் சேவையாளர்கள், சமூக நலன்விரும்பிகள் உட்பட கிராமிய மட்டத்திலான முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் அரசியல் பிரிவு செயலாளர் இரா. சலோபராஜா மற்றும் ஏற்பாட்டாளர் காளிமுத்து செல்வகுமார் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles