எங்கள் ஆட்சியில் மக்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் – சஜித் உறுதி

ஊழியர்களின் உரிமைகளை இல்லாது செய்து, அவர்களை அடக்கி, ஒடுக்கி செல்வந்தர்களை திருப்திப்படுத்தும் விதத்திலான முதலாளித்துவ கொள்கையையே தற்போதைய அரசு கடைப்பிடிக்கின்றது – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“எமது நாட்டு பொருளாதாரத்தின் இதயம்தான் உழைக்கும் வர்க்கத்தினர். ருளாதார மேம்பாடு குறித்து கவனம் செலுத்தப்பட்டாலும் ஊழியர்களின் பொருளாதார மேம்பாடு குறித்து உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை. எனவே, பொருளாதாரம் உயரும் அதேவேளை ஊழியர்களின் பொருளாதாரமும் உயரவேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது செல்வந்தர்களின் கட்சி கிடையாது. அது உழைக்கும் வர்க்கத்தினருக்கான கட்சி, நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்குமான கட்சியாகும். ஆகவே, மக்களின் மனநிலை, ஊழியர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் உள்ளிட்ட அனைத்தையும் உணரும் தன்மை எமக்கு இருக்கின்றது. பணத்தால் மட்டும் நாட்டை கட்டியெழுப்பிடமுடியாது. அதற்கு ஊழிய படையணியின் அர்ப்பணிப்பும் அவசியம்.

ஊழியரை ராஜாவாக்குவோம் எனக்கூறி ஊழிய படையணியின் உதவியுடன்தான் தற்போதைய அரசு ஆட்சீபிடமேறியது. ஆனால் இன்று நடப்பது என்ன? ஊழியர்களுக்கான நலன்புரி விடயங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக செல்வந்தர்களுக்கு தொடர்ச்சியாக வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஊழியர்களின் உரிமைகளை தற்போதைய அரசு மறுக்கின்றது. அவர்களை ஒதுக்கி ஓரங்கட்டுகின்றது. அதுமட்டுமல்ல செல்வந்தர்களை பாதுகாக்கும் திட்டமே முன்னெடுக்கப்படுகின்றது.

எமது ஆட்சியில் ஊழியர்களுக்கு உரிய இடம், அங்கீகாரம் வழங்கப்படும். தற்போதைய அரசு இடைநிறுத்திய சலுகைகள் வழங்கப்படும். 3 ஆயிரம் முதல் 24 ஆயிரம் ரூபாவரை சம்பள உயர்வு வழங்குவதற்கு திட்டம் உருவாக்கப்படும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவும் உரிய வகையில் வழங்கப்படும். தனியார்துறை ஊழியர்களுக்கும் கை கொடுப்போம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles