“எங்கள் புண்ணியத்தால்தான் மைத்திரி பாராளுமன்றில் இருக்கிறார்” – மொட்டு கட்சி விளாசல்

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புண்ணியத்தால்தான் மைத்திரிபால சிறிசேன இன்று எம்.பியாக இருக்கின்றார். இதனை மறந்தே அவர் எமது கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்துவருகின்றார். ” – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

மொட்டு கட்சி உடைந்துவிட்டது, அது இனி மலராது என்றெல்லாம் அக்கட்சிமீது மைத்திரிபால சிறிசேன தொடுத்துவரும் சொற்போர் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மொட்டு கட்சியின் புண்ணியத்தால்தான் சுதந்திரக்கட்சிக்கு 14 எம்.பிக்கள் கிடைத்தனர். தனித்து போட்டியிட்டிருந்தால் இரு ஆசனங்கள்கூட கிடைத்திருக்காது. இதனை மறந்துவிட்டே மைத்திரி உளறுகின்றார். அடுத்து ஏதோவொரு கூட்டணியில் தொங்குவதற்காகவே அவர் அவ்வாறு செயற்படுகின்றார். மொட்டு கட்சியில் வந்தவர்கள்தான் இன்று மொட்டு கட்சியை தாக்குகின்றனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles