” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைய வேண்டும். அப்போது நாட்டைக் கட்டியெழுப்ப கூடியதாக இருக்கும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
” எனக்கு அமைச்சு பதவி என்பது பிரச்சினை அல்ல. எனது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளே முக்கியம். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளேன்.
கட்சி மற்றும் நிறத்தை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நேரம் அல்ல இது. ரணில், சஜித் என எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக இணைந்தால்கூட பரவாயில்லை. ஏனெனில் அப்போதுதான் நாட்டை கட்டியெழுப்ப கூடியதாக இருக்கும்.” என்றார்.
