எப்போது புது வழி பிறக்கும்?

புஸல்லாவை, பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வழியாக புப்புரஸ்ஸ ,கலஹா ,தெல்தோட்டை ஹேவாஹெட்ட ஆகிய நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது.

இப்பாதையின் ஒரு பகுதி புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. மழைக்காலத்தில் சேறுபாதையாக மாறிவிடுவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பாதையானது நுவரெலியா – புஸ்ஸல்லாவ ஊடாக கலஹா, தெல்தோட்டை, ஹேவாஹெட்ட, கித்துல்கல ஊடாக கண்டி போன்ற இடங்களுக்கு செல்லும் ஒரு கிட்டிய பாதையாகும்.

தற்போது மேற்படி பிரதேசங்களுக்கு மக்கள் கம்பளை மற்றும் பேராதனை கலஹா சந்திக்கு சென்றே செல்கின்றனர். இது இவர்களுக்கு நீண்ட நேரத்தையும் நீண்ட தூரத்தையும் அதிக செலவையும் கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் இந்த பாதை திருத்தி அமைக்கப்படுமானால் இந்த பாதையை நாளாந்தம் பாவித்து வரும் மக்கள் பெரும் நன்மை அடைவர்.

தற்போது இந்த பாதையில் தனியார் வாகனங்கள் முச்சக்கரவண்டி ஆகியனவே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அரச போக்குவரத்து இங்கு இல்லை. இதனால் பாடசாலை மாணவர்களும் பெருந்தோட்ட தொழிலாளர்களும் பாதித்து வருகின்றனர். குறித்த பாதையில் ஒரு தொகுதி செப்பனிடப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான பகுதி செப்பனிடப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு சம்பந்தபட்டவர்கள் இந்த பாதையை திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

மக்கள் செய்தியாளர் பா. திருஞானம்

Related Articles

Latest Articles