” எமது கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர்” – மொட்டு கட்சி மீண்டும் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு தகுதியான வேட்பாளர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ளனர் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு என மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் அறிவித்துவரும் நிலையிலேயே அக்கட்சியின் செயலாளர் இன்று இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்துள்ளார்.

” 2024 செப்டம்பர் மாதத்துக்கு பிறகே ஜனாதிபதி தேர்தல் வரும். எனவே, முன்கூட்டியே வேட்பாளரை அறிவிக்கும் எண்ணம் இல்லை. வேட்புமனு தாக்கல் காலப்பகுதியிலேயே வேட்பாளர் அறிவிப்பு இடம்பெறும்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

” பொருளாதாரம், பாதுகாப்பு என எந்த துறையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தகுதியான வேட்பாளர்கள் மொட்டு கட்சி வசம் உள்ளனர்.” எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles