எரிபொருட்களின் விலையில் மாற்றம்?

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக பரவிய செய்தியினை அடுத்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மின்சக்தி இது தொடர்பில் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

விலை குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிலைய டீலர்கள் ஓடர்களை வழங்காமையால், எரிபொருள் நிலையங்கள் சில மூடி கிடக்கின்றன. இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தம் இருக்காது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ceypetco மற்றும் LIOC இரண்டும் தங்களுக்கு தேவையான ஓடர்களை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles