‘எரிபொருள் களவாடிய நால்வர் கைது’

அலுத்கம பொலிஸ் பிரிவிலுள்ள சில பிரதேசங்களிலும்  வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து பெற்றோலை , பிளாஸ்டிக் கொள்கலன்களில் திருடிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து பொலிஸார், சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள்  ஆட்டோவில் வந்து, இவ்வாறு பெற்றொல்  திருடியுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு களவாடப்படும் பெற்றோலை, விற்று கிடைத்த பணத்தில்  போதைவஸ்து பயன்படுத்தியுள்ளனர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles