எரிபொருள் பௌசரை மறித்து பசறையில் போராட்டம்!

பதுளையிலிருந்து படல்கும்பரை நோக்கி பயணிக்க தயாரான ‘எரிபொருள் பௌசரை’, முன்னோக்கி செல்லவிடாது, பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டது. பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதனையடுத்து பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டால், எரிபொருள் பௌசர், உரிய இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போராட்டக்காரர்களும் கலைந்து சென்றனர்.

இவ்வார்ப்பாட்டத்தினால் பசறை – மட்டடக்களப்பு பிரதான வீதியில் சுமார் ஒரு மணித்தியாலம் போக்குவரத்து தடைபட்டது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles