எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும்- நாமல்

மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விநியோக நிறுவனங்களும் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles