எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து மலைநாட்டிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் (படங்கள்)

அத்தியவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் வலியுறுத்தியும், கினிகத்தேனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தீப்பந்தம் ஏந்தி நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ‘அமைச்சர்கள் சொகுசு வாகனங்களில் அப்பாவி மக்கள் எண்ணை சட்டிக்குள்’, போதும் போதும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம், விலை ஏற்றி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.

ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கம் எரிபொருளின் விலையினை உடன் குறைக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினர்.

Related Articles

Latest Articles