எல் போர்ட் காரர்கள்: என்பிபிமீது ரணில் விசமர்சனக் கணை தொடுப்பு!
‘நாடாளுமன்றத் தேர்தலின்போது எல் போர்ட் காரர்களை தெரிவுசெய்ய வேண்டாம் எனவும், அனுபவம் மிக்கவர்களை சபைக்கு அனுப்புமாறு கோரினேன். எனினும், எல் போர்ட் காரர்கள் சபைக்கு வந்தனர். இன்று வாகனத்தை சேதப்படுத்திவிட்டனர். வாகனத்தில் எடுப்பதற்கு ஒன்றும் இல்லை.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப்போவதில்லை. எனவே, பெரும்பான்மையை பெறுவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். பெரும்பான்மை பலம் இருந்தால்தான் சபைத் தலைவரை தெரிவுசெய்ய முடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
எனவே, நாம் எவருடனும் மோத தேவைஇல்லை. பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சிப்போம் எனவும் ரணில் கூறினார்.










