நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதே எமது இலக்காக இருக்கின்றது. பஸில் ராஜபக்ச நிச்சயம் நாட்டுக்கு வருவார் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பொதுத்தேர்தலுக்கு தயாராகிவருகின்றோம். அதற்கு முன்னர் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை வெற்றிகொள்வதற்கு முயற்சிக்கின்றோம். புதியதொரு அரசியல் சக்தியை கட்டியெழுப்புவோம்.
கொள்கை ரீதியிலான முரண்பாடு காரணமாகவே ஐ.தே.கவுடனான கூட்டு முறிந்தது. இனியும் கூட்டணி சாத்தியம் வராது என்றே கருதுகின்றேன்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதே எமது இலக்கு.
அநுரவுக்கு 3 சதவீத வாக்குதான் இருந்தது ,மக்கள் அவரை பிரபலமாக்கினர் என்பதை மறந்துவிடக்கூடாது. பஸில் ராஜபக்ச வருவதாகவே எமக்கு அறிவித்துள்ளார்.” – என்றார்.










