எல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இஸ்ரேல் நாட்டு பிரஜை காயம்!

இஸ்ரேல் நாட்டு பிரஜையொருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்துள்ளார்.

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வோட்டர்போல் வீதியில் அமைந்துள்ள மவுன்டன் கெவன் விடுதிக்கு அருகாமையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபரை 1990 காவு வண்டியில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறு அளவிலான காயமே ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles