எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் தடை

வெள்ளவாயப் பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக, வெள்ளவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ், ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

01-03-2022ல் காத்தான்குடியைச் சேர்ந்த மூவர், எல்லவெல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றிருந்த போது மூவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

 ஆதாம் ரிஹாம் (22) ,அப்துல் ஹகீம் சிலாம் (21) என்ற இருவருமே இவ்வாறு
நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இவர்களது சடலங்கள் வெள்ளவாய அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எல்லவெல நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு, எமது பிரதேச சபையினால் பாதுகாப்பு கம்பி வேலி போடப்பட்டு, எச்சரிக்கை பதாதையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், உல்லாச பிரயாணிகள் கம்பி வேலியை உடைத்துத் தள்ளி, எச்சரிக்கை பதாதையையும் அகற்றியுள்ளனர்.

இதுவரையில், இந் நீர்வீழ்ச்சியில் 13 பேர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.. இந் நீர்வீழ்ச்சிப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய, எமது பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உறுதியான பாதுகாப்பு மதில், நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாத வகையில் சுற்று வலைவுகள், உறுதியான எச்சரிக்கை காட்சிப்படுத்தல் ஆகியனவற்றை மேற்கொள்ளவுள்ளோம். அவ் வேலைத்திட்டம் நிறைவு பெறும் வரை, இந் நீர்வீழ்ச்சிப் பிரதேசம்
முற்று முழுதாக தடை செய்யப்பட்ட பிரதேசமாக மாற்றியுள்ளோம் என தெரிவித்தார்.

 

எம். செல்வராஜா

Related Articles

Latest Articles