எஸ்.பிக்கு அமைச்சு பதவி!

சர்வக்கட்சி அரசில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ,நாமல் ராஜபக்ச , பவித்ரா, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன,   மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்சவுக்கும்  இடையிலான சந்திப்பு பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து அமைக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,அரசியல் கட்சிகளுக்குமிடையிலான விசேட சந்திப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளுக்கும்,ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த நாட்களில் இடம்பெற்றன.

மக்கள் விடுதலை முன்னணிக்கும்,ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.

சர்வ சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் பிரதமருக்கும்,பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

Related Articles

Latest Articles