ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் அமைச்சரவையும் மறுசீரமைக்கப்படவுள்ளது. இதன்போதே எஸ்.பிக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.
எனினும், இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
