எஹலியகொடை பதுவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஆறு பேர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து பலாங்கொடை பயணித்த ஆட்டோவும், கொழும்பு நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து 2024.03.10 மாலை இடம்பெற்றுள்ளது.
ஆட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய். தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் உட்பட ஐந்து பேரும் காயங்களுடன் எஹலியகொடை வைத்திய சாலையில்அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்தோடு கார் சாரதியும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை எஹலியகொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எவ்.எம். அலி










