ஏமாற்று வித்தை காட்டும் அரசு: சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு

“தமிழர்கள் விடயத்தில் அநுர அரசும் முன்னைய ஆட்சியாளர்களைப் போலவே ஏமாற்று வித்தைகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் அநுர அரசு மீதான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு குறைவடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.”

– இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அநுரகுமார ஜனாதிபதியாக வந்திருக்கின்ற நிலையில் உண்மையாகவே ஜனாதிபதி மீதான எதிர்பார்ப்பு எந்தளவில் உள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக ஐனாதிபதி மீதான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு என்பன குறைந்து வருகின்றது என்பதுதான் உண்மை. இதனால் பெரும் நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு இப்போது ஏமாற்றமே கிடைக்கின்றது.

இவ்வாறான நிலைமையில் அரச கட்சியைப் பொறுத்தவரையில் தாங்கள்தான் தமிழ் மக்களுக்கு ஏதோ செய்வதாகக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். அதனை எமது மக்கள் தெளிவாக முதலில் விளங்கிக்கொண்டு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

குறிப்பாக அநுரவின் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்காகப் பலதைச் செய்வதாகச் சொல்லி இருந்தது. ஆனால், அவ்வாறு கூறிய எதனையும் அநுர தரப்பு இதுவரையில் செய்யவில்லை.

அதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்று ஐனாதிபதித் தேர்தல் காலத்தில் சொன்னவர்கள் இப்போது நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தொனியில் இப்போது பேச ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்குத் தாங்கள் செய்வதாகக் கூறிய எந்த விடயத்தையும் செய்யாமல் இருப்பது மாத்திரமல்லாது மாறாக இதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அதில் மாகாண சபைத் தேர்தலை இப்போது நடத்தப் போவதில்லை, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாது, காணிகள் விடுவிப்பில் திட்டவட்டமான முடிவில்லை. ஆனாலும், வீதிகளைத்தான் திறப்பதில் கவனம், ஊழலுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி கொண்டு மிக மிக ஊழல் பேர்வழிகளையே நியமனம் செய்கின்றார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் உண்மையாகவே ஊழலுக்கு எதிராக இருக்கின்றார்களா? சமத்துவம்? தமிழ் – சிங்கள – முஸ்லிம் என பாகுபாடு இல்லாமல் இருக்கின்றார்களா? என்றால் அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் அதற்கு எதிராகத்தான் இருக்கின்றது.

இவ்வாறான சூழலில் தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும். அதுவும் தமிழர் தரப்பு ஒன்றாக ஐக்கியப்பட்டுப் போவதன் ஊடாகத்தான் தமிழ் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் எப்போதும் ஐக்கியப்பட்டு செயற்படவே விரும்புகின்றோம். இதற்கான அழைப்புக்களை கூட பல தடவைகள் தமிழரசுக் கட்சிக்கு விடுத்திருக்கிறோம்.

தமிழரசின் உள்வீட்டுக்குள்ளே ஏற்பட்ட குழப்பங்களால் அவர்கள் நீதிமன்றம் வரை சென்று அதிலிருந்து பிரிந்து சுயேச்சையாகக் கேட்கும் அளசுக்குக் கூட வந்திருக்கின்றார்கள். ஆகவே, இவ்வாறான குழப்பங்களைத் தமது கட்சிக்குள்ளேயே இவர்கள் முதலில் திருத்திக்கொள்ள வேண்டும்.

ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த பலமான – வலுவான சக்தி நாடாளுமன்றம் செல்ல வேண்டியது அவசியம். அதற்கமைய மக்கள் தமது முழுமையான ஆதரவை எமக்கு வழங்க வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles