ஏழு உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்  லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதனடிப்படையில்,

• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 5.00 ரூபாய் குறைக்கப்பட்டது

• பருப்பு – ஒரு கிலோவுக்கு 11.00 ரூபாய் குறைக்கப்பட்டது

• டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 15.00 ரூபாய் குறைக்கப்பட்டது

• மிளகாய் – ஒரு கிலோவுக்கு 15.00 ரூபாய் குறைக்கப்பட்டது

• நெத்தலி – ஒரு கிலோவுக்கு 50.00 ரூபாய் குறைக்கப்பட்டது

• வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோவுக்கு 6.00 ரூபாய் குறைக்கப்பட்டது

• உருளைக்கிழங்கு – ஒரு கிலோவுக்கு 5.00 ரூபாய் குறைக்கப்பட்டது

Related Articles

Latest Articles