சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, அவ்வமைப்பின் தாளத்துக்கேற்ப ஆடும் கைப்பாவையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாறிவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தாம் ஆட்சிக்கு வந்தால் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. ஆனால் தற்போது மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும் எனவும், விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும், மக்களின் வாழ்க்கைச்சுமை குறைக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
எனினும், இவ்வுறுதிமொழிகளை மறந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, அவ்வமைப்பின் தாளத்துக்கேற்ப ஆடம் கைப்பாவை அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாறியுள்ளது.
எனவே, அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக நாம் முன்னிலையாவோம்.” – என்றார்.










