ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது விசேட சம்மேளனம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 21 ஆம் திகதி கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் புதிய யாப்பு முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்படவுள்ளது.
நவீன யுகத்துக்கு ஏற்ற வகையிலேயே புதிய யாப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது . கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான கட்டுப்பாடுகளும் இலகுபடுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.










