‘ ஐ.தே.கவையும் மலையக மக்களையும் பிரிக்கமுடியாது’ – சச்சிதானந்தன்

” பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியையும் மலையக மக்களையும் ஒருபோதும் பிரிக்கமுடியாது.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் முருகன் சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” எனது நாற்பது வருட அரசியல் சேவைகளில், எம் மக்கள் பூரண பயன்பெற்றுள்ளனர். ஆசிரிய நியமனங்கள் உட்பட இரண்டாயிரம் பேருக்கான அரச நியமனங்கள், சமூக மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் என்ற வகையில் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். என்னைப் பற்றி,எமது மக்கள் நன்கறிவர்.

எனது வெற்றியை எமது மக்கள் தற்போதைய நிலையிலேயே உறுதிசெய்து விட்டதாகவே அறிகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சி, யானைசின்னம், பச்சை நிறம்,எம் மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுத்த கட்சி இவ்விடயங்கள் எமக்கள் மத்தியில் ஆழமாகவே பதிந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியையும்,எம் மக்களையும் தனித்தனியாக பிரித்துவிடமுடியாது. அதுபோன்றுதான் என்னையும் எம்மக்களையும்,பிரித்துப் பார்க்கவும் முடியாது. வெற்றி உறுதி. எனது சின்னம் யானை, இலக்கம் 7 என்பதை எமது மக்கள் நன்குபுரிந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் சிறந்த தலைமைத்துவத்துடனும், திறன் மிக்க ஆளுமை மற்றும் முக்கியஸ்தர்களுடனும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. மக்களினால் ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதனைமுன்னிலைப்படுத்திகட்சிபிளவுப்பட்டிருப்பதாககருதமுடியாது. அதேதலைவர் ரணில் விக்கிரமசிங்க,அதேசின்னம் யானை. அதேநிறம் பச்சை.

எமது கட்சிக்குள்ள செல்வாக்கு மேலோங்கியே இருக்கின்றது. தேர்தலிலும் எமது கட்சி வெற்றிபெறும். டி.எஸ்.சேனநாயக்க, டட்லிசேனநாயக்க, ஜே.ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாச,ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தொடர்ச்சியான வழிநடாத்துதல்களுக்கமையவே, எமது கட்சி அதேபானியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

எமக்கு எந்த சவாலும் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் எமக்குமேதான் போட்டி. வேறுஎந்தப் போட்டியும் இல்லை. ” – என்றார்.

எம். செல்வராஜா பதுளை

Related Articles

Latest Articles