ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை?

கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை இலங்கை பேணி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வெளிநாட்டுக் கடன்களும் திருப்பிச் செலுத்தப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளமைக்கு வருந்துவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles