ஐக்கிய தேசியக் கட்சிக்கு விரைவில் புதிய யாப்பு!

புதியதொரு கட்சி யாப்பை தயாரிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கூடியபோது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்சிக்கான யாப்பை தயாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன, தயா பெல்பொல, ரொனால்ட் பெரேரா மற்றும் நிஷாங்க நாணயக்கார ஆகிய ஜனாதிபதி சட்டத்தரணிகளை உள்ளடக்கிய வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles