ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பல்வேறு மதஸ்தலங்களில் இன்றைய தினம் விசேட வழிகாடுகள் இடம்பெற்றுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து கொச்சிகடை சிவன் கோயிலிலும் விசேட பூகை வழிபாடுகள் நடைபெற்றன.
ஐ.தே.கவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுவாமிநாதன், யோகராஜன் மற்றும் முன்னாள் ஆளுநர் சாந்தனி கொங்காகே ஐதேகவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உட்பட கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயம், டவுன் வோலில் அமைந்துள்ள பள்ளிவாசலிலும் இன்று மாலை மத வழிபாடுகள் இடம்பெற்றவுள்ளதுடன், கங்காராமை விகாரையில் விசேட வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.










