எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி இன்று உதயமானது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் காங்கிரஸ், சுதந்திரக்கட்சி (தயாசிறி அணி) என்பன மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
மேலும் சில சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளன.
கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை தற்போது கைச்சாத்திடப்பட்டுவருகின்றது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நிகழ்வு இடம்பெறுகின்றது.










