ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஜனாதிபதி கோரிக்கை

புதிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்குமாயின்  அது தொடர்பில் தனக்கு தாமதமின்றி அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அனுப்பிய கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் விதமாக பல்வேறு தரப்பினரும் முன்வைத்த யோசனைக்கு அமைவாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக முதலில் சஜித் பிரேமதாசவுக்கே அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles