ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறுவாரா பொன்சேகா?

ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனிநபருக்குரிய சொத்து கிடையாது. அதில் எமது பங்களிப்பும் உள்ளது. எனவே, கட்சியில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளதால் சரத் பொன்சேகா கடும் அதிருப்தியில் இருக்கின்றார் எனவும், கட்சியை விட்டு வெளியேறவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், தயா ரத்னாயக்கவை இணைத்துகொண்டமை தொடர்பில் கட்சி தலைவர் மற்றும் செயலாளரிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளேன் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles