ஐக்கிய மக்கள் சக்தியில் இணையமாட்டேன்!

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் அங்கத்துவம் பெறப்போவதில்லை. எனினும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவி தயாசிறி ஜயசேகரவுக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு சஜித் பிரேமதாச எனக்கு அழைப்பு விடுத்தார். நான் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர். அக்கட்சியின் செயலாளர் பதவியை வகிக்கின்றேன். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் திட்டம் இல்லை.

அழைப்பு விடுத்தமைக்காக சஜித் பிரேமதாசவுக்கு நன்றி. எதிர்க்கட்சி தலைவராக அவர் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles