” ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. சிலர் வேண்டுமென்றே போலி தகவல்களை பரப்பி பிரச்சினையை ஏற்படுத்த முற்படுகின்றனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், தலைமைப்பதவியை கைப்பற்ற சரத்பொன்சேகா முற்படுகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஐக்கிய மக்கள் சக்தியின் தேவை உணரப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஆதரவு வலுக்கின்றது. அதனால்தால் சிலர் போலி பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்வைக்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.
