கலைந்தது மொராக்கோவின் கனவு: அரையிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

கிலியன் எம்பாப்பே மற்றும் உஸ்மான் டெம்பேலே ஆகியோரின் அதிரடி கோல்களின் உதவியோடு, மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

பாஸ்டன் நகருக்கு வெளியேயுள்ள கிலெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில், எம்பாப்பே இந்தத் தொடரில் தனது 8ஆவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த ஆறாவது நிமிடத்தில் (66ஆவது நிமிடத்தில்) உஸ்மான் டெம்பேலே மற்றொரு கோலை அடிக்க, பிரான்ஸின் வெற்றி உறுதியானது.

இந்த வெற்றியின் மூலம், 2018ஆம் ஆண்டின் உலக சாம்பியனான பிரான்ஸ் அணி, டெக்சாஸின் ஆர்லிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறத் துடிக்கும் பிரான்ஸ் அணிக்கு, ஆப்பிரிக்க சாம்பியனான மொராக்கோ பலத்த சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், திடியர் டெசாம்ப்ஸ் தலைமையிலான பிரான்ஸ் அணி ஆட்டம் முழுவதும் தனது முழு கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது.

மறுபுறம், மொராக்கோ அணியால் பிரான்ஸின் கோல் எல்லையை நோக்கி ஒரு தீவிரமான தாக்குதலைக்கூட நடத்த முடியாமல் போனது.

ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அசெடின் ஔனாஹி (Azzedine Ounahi) அடித்த ‘ப்ரீ கிக்’ (Free-kick) பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் மைக் மைக்னன்மிகச் திறமையாகத் தடுத்து நிறுத்தினார்.

முன்னதாக, ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்க பிரான்ஸ் அணி பெரும் போராட்டத்தை எதிர்கொண்டது.

குறிப்பாக 28ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பொன்னான பெனால்டி வாய்ப்பை மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோ தடுத்து நிறுத்தினார்.

மொராக்கோ வீரர் நுஸைர் மஸ்ரௌயி செய்த ஃபவுல் காரணமாக எம்பாப்பேவுக்கு இந்த பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

எனினும், நீண்ட ‘VAR’ பரிசோதனைக்கு பின்னரே நடுவர் இதற்கு அனுமதி அளித்திருந்தார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்த போதிலும், பிரான்ஸின் தொடர் அழுத்தங்களுக்கு மொராக்கோவால் நீண்ட நேரம் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில், மைதானத்தின் எல்லைப் பகுதியில் இருந்து எம்பாப்பே அடித்த அசாத்தியமான வலது கால் ஷாட், மொராக்கோ கீப்பர் போனோவை கடந்து கோலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து 66ஆவது நிமிடத்தில், பிஎஸ்ஜி (PSG) நட்சத்திர வீரரான டெம்பேலே நடுப்பகுதியிலிருந்து பந்தை வேகமாக கடத்திச் சென்று, மொராக்கோவின் பின்களத்தை ஏமாற்றி மற்றுமொரு தாழ்வான கோலை (low finish) அடித்தார். இதன் மூலம் பிரான்ஸின் வெற்றி முற்றிலும் உறுதியானது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles