“காலனித்துவ ஆட்சியின்போது வெள்ளையர்கள்கூட, மகாசங்கத்தினரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. தற்போது அவ்வாறு நடந்துள்ளது பாரதூரமான விடயமாகும்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“காலனித்துவ ஆட்சியின்போது மகாசங்கத்தினருக்கு நெருக்கடிகள் இருந்தபோதிலும், அவர்களின் துறவற ஆடையில் கைவைக்கவில்லை; அதனை அகற்றுவதற்கு வெள்ளையர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, தற்போது அவ்வாறு நடந்துள்ளது பாரதூரமான பிரச்சினையாகும். இது ஒட்டுமொத்த பௌத்த மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பில் ஐதேக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஊடாகக் கேள்விகள் எழுப்பப்படும்,” என்றார் வஜிர அபேவர்தன.










