ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டால் இணைந்து பயணிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் அவருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
‘ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். இரு அணிகளும் இணைந்திருந்த தரப்புகள்தான்.
எம்முடன் ஐக்கிய தேசியக் கட்சி இணையலாம். ஐதேகவின் தலைமைப்பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டாலும் அது பற்றி பரிசீலிக்கமுடியும். ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான் எமது பயணம். ஐதேகவுடன் இணைந்துள்ள ஏனைய தரப்புகளுடன் அல்ல.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க 30 ஆம் திகதி நாடு திரும்புகின்றார்.
