ஐதேகவுக்கு சஜித் அணி அழைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதற்குரிய சாத்தியம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இணைவதற்குரிய அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு அதிகாரப்பூர்வமாக விடுக்கவில்லை. எமது பக்கமே 40 எம்.பிக்கள் உள்ளனர். எனவே, ஐதேகவுக்கு வேண்டுமானால் எம்முடன் கூட்டணி அமைக்கலாம்.

பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் எம்.பி. பதவி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. தேசியப் பட்டியல் ஊடாக எவரை நியமிப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது. விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்.”- என்றார்.

Related Articles

Latest Articles