ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

சுமார் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆசிரியர்கள் மாகாணத்தின் பெயருக்கு ஏற்ப விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய முக்கிய பாடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் எதிர்காலத்தில் மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அமைச்சர் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles