ஐயப்பன் பக்தர்களின் ஆன்மீக யாத்திரையிலுள்ள சவால்கள் தொடர்பான சந்திப்பு

ஐயப்பன் யாத்திரை மேற்கொள்ளவதில் உள்ள சவால்கள் தொடர்பில் இந்து கலாச்சார திணைக்களத்தில் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஷ்வரன், பிரதமரின் ஆன்மீக இணைப்பாளர் பாபு சர்மா ,அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தின் செயலாளர் கணேஷமூர்த்தி, சபரிமலை ஒன்றிய குருக்கள் கே.ரவீந்திர குருசாமி மற்றும் ஐயப்ப குருசங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கான வீசா தற்போது நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் வீசா வழங்குவதற்கான விசேட நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இது தொடர்பாக இந்திய உதவி உயர்ஸ்தானிகளை தொடர்பு கொண்டு, வீசா வழங்குவதற்கான தேவையான நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கையை ஏற்று நவம்பர் மாதம் முதல் வீசா வழங்குவற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கேரளா மாநிலத்திற்கு விமான சேவை இயங்காத சூழ்நிலையில் சபரிமலை செல்வதற்கு தமிழகம் ஊடாக வெகுதூரம் சாலைவழியில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் மீண்டும் விமான சேவை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை செந்தில் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக விமானத்துறை அமைச்சரை செந்தில் தொண்டமான் தொடர்பு கொண்டு கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்ற விமானத்துறை அமைச்சர் கொவிட் தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தப்புரம் மற்றும் கொச்சின் ஆகிய இரண்டு விமானநிலையங்களுக்கும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து ஐயப்பன் யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு ஒன்லைன் மூலம் பதிவு செய்து சபரிமலை செல்வதை சபரிமலை தேவஸ்தானத்தால் கட்டாயம் ஆக்கப்பட்டது. இவ் ஒன்லைன் முறைமையை இலகுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களைமுன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய தூதரக கலாச்சார செயலாளரை செந்தில் தொண்டமான் தொடர்பு கொண்டு ஒன்லைன் முறைமையை செயற்படுத்த இலகுவான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles