” ஐயோ, என்னை காப்பாற்றுங்கள்” – சவூதியில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள மலையக பெண் கதறல்

2ஆம் இணைப்பு

வீடியோ வெளியானதையடுத்து குறித்த பணிப்பெண் இன்று முற்பகல், வெளிநாட்டு முகவரால் (ஏஜன்சிகாரர்கள்), முகவர் நிறுவனத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான படமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து இன்னும் உறுதி தகவல் கிடைக்கவில்லை. இது தொடர்பில் ‘மலையக குருவி’ தனது பார்வையை தொடர்ந்து செலுத்திக்கொண்டிருக்கின்றது.

முதலாவது இணைப்பு

” என்னை இங்கு சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர், இங்கு இருக்க முடியாது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்,

இவ்வாறு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார் மலையக தாயொருவர்.

சரஸ்வதி புஷ்பராஜ். இவர், இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர், இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

வறுமை காரணமாக கடந்த ஜுலை 15 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

அவர் வேலைசெய்யும் வீட்டில், வீட்டுக்காரர்களால் அவர் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளன. உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை என தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

தற்போது அவரின் தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ளது. அவரை சவூதிக்கு அனுப்பிய இலங்கையில் உள்ள முவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக சரஸ்வதியின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அழைப்பை எடுத்தால்கூட அவர்கள் பதிலதிப்பதில்லையாம்.

தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கண்ணீர்மல்க சரஸ்வதி இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles