ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

ஒரு கிலோவிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொடை குடா புத்கமுவ பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த பெண் கைதானார்.

01 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, 12,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles