ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படலாம் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.  இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

எனவே, ஒக்டோபர் மாதம் முதல் சாதகமான பெறுபேறு கிடைக்கும் என நம்புகின்றோம். எது எப்படி இருந்தாலும் அடுத்த கொரோனா செயலணிக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles