இந்தியாவின் ஒடிசாவில் ரயில்கள் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய அரசுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
துயரமான இச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்
